Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு கேல்விகளும் பதில்களும்

கேள்விகளும் பதில்களும்

01. வினா :- பிரமாணங்களை அடிப்படையகாகக் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் கௌரவ உறுப்பினர்களுக்காக 2010 ஆம் ஆண்டுக்காக எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது?
விடை :- 2.5 மில்லியன் ரூபா


02. வினா :- கௌரவ உறுப்பினர்களில்  பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக ஏதேனும் முன்மொழிவினை வழங்குதல் எவ்வாறு இடம் பெறுகின்றது? அதன் பின்னர் அந்த உதவியை எவ்வாறு பெற்றுக்கொள்வது?
விடை :- கௌரவ உறுப்பினரால் ஏற்புடைய அபிவிருத்தி  முன்மொழிவு கொள்கை மற்றும் திட்டமிடல் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படல். அதற்கிணங்க ஏற்புடைய பிரதேச செயலகம் அல்லது பிரதேச சபை போன்ற அரச நிறுவனங்கள் அமுலாக்கும் நிறுவனங்களாகத் தெரிவு செய்யப்பட்டு அந்நிறுவனங்களால் சம்பந்தப்பட்ட பிரேரணையை அமுலாக்கும்  பொருட்டு அவசியமான ஆவணங்கள் வரவழைக்கப்பட்டு அதற்கிணங்க அமுலாக்கச் செய்வித்தல்.


03. வினா :- கௌரவ உறுப்பினர்களின் பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக நிதி வழங்கப்படக்கூடிய துறைகள் யாவை?
விடை :-

  • வீதி, மின்சாரம், குடிநீர் போன்ற பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்காக.
  • குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக கூரைத்தகடுகள், மரண உதவி மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கான தகரக் கொட்டில்கள் மற்றும் கதிரைகள், பாடசாலை அபிவிருத்திக்கானவை, கிராமிய சுகாதார நிலையங்களுக்கான  கதிரைகள் / வாங்குகள்.
  • பொருத்தமான எந்தவொரு  சட்டமுறையான தொழில் முயற்சியை / கைத்தொழிலை சுயதொழிலாக ஆரம்பிக்க.
  • விளையாட்டுத்துறை மற்றும் கலாசார அலுவல்களின் அபிவிருத்திக்காக.
  • நீர்ப்பாசன, வாய்க்கால்களை நிர்மாணித்தலும் புனரமைத்தலும், விவசாய உபகரணங்களை வழங்குதல்.


04. வினா :- சுயதொழிலை ஆரம்பிப்பதற்காக வழங்கக்கூடிய  உச்ச பணத்தொகை யாது? அவ்வுதவியைப் பெற்றுக்கொள்ள பூர்த்திசெய்திருக்க வேண்டிய தேவைகள் யாவை?
விடை :- ரூ.35,000.00

ஒவ்வொரு கருத்திட்டத்திற்காகவும் கருத்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டிருத்தல் வேண்டுமென்பதோடு, அதன் பொருட்டு ஏற்புடைய அமைச்சின்/திணைக்களத்தின் விதப்புரை பெறப்படல் வேண்டும்.


05. வினா :- பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகமொன்றுக்காக விளையாட்டுச் சாதனங்களுக்காக வழங்கக்கூடிய  உச்சமட்டத் தொகை யாது?
விடை :- ரூ. 20,000.00.


06. வினா :- மரண உதவி அல்லது கிராம அபிவிருத்திச் சங்கத்திற்காக தகரக் கொட்டில் அல்லது கதிரைகள் தொடர்பாக வழங்கக்கூடிய உச்ச வரையறை யாது?
விடை :- ரூ. 30,000.00.

 
ஏப்ரயில் 2024
S M T W T F S
31 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 1 2 3 4